சந்தையில் அரிசி பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்கி அரிசி விலையை சிலர் அதிகரிப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க குற்றம்சாட்டியுள்ளார்
பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை அதிகரித்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நெல் அறுவடை எதிர்பார்த்த அளவை விட குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடம் பருவத்தில் 2.9 மில்லியன் மெட்ரிக் டொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 2.6 மில்லியன் மெட்ரிக் டொன் ஆக குறைவடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழலில் நாட்டில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு தட்டுப்பாடு இல்லாமல் அரிசியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி அரிசி கையிருப்புக்களை பதுக்கி வைத்திருக்கும் மற்றும் கட்டுப்பாட்டு விலையைவிட அதிகமான விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரிசி பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்கியுள்ள ஆலை உரிமையாளர்கள் - அமைச்சர் சுட்டிக்காட்டு சந்தையில் அரிசி பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்கி அரிசி விலையை சிலர் அதிகரிப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க குற்றம்சாட்டியுள்ளார் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை அதிகரித்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நெல் அறுவடை எதிர்பார்த்த அளவை விட குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடம் பருவத்தில் 2.9 மில்லியன் மெட்ரிக் டொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 2.6 மில்லியன் மெட்ரிக் டொன் ஆக குறைவடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில் நாட்டில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு தட்டுப்பாடு இல்லாமல் அரிசியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி அரிசி கையிருப்புக்களை பதுக்கி வைத்திருக்கும் மற்றும் கட்டுப்பாட்டு விலையைவிட அதிகமான விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.