• Nov 28 2024

இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடி...! 18 இந்திய மீனவர்கள் விடுதலை...! ஒருவருக்கு சிறை...!

Sharmi / Feb 22nd 2024, 11:27 am
image

கடந்த 07ஆம் திகதியன்று எல்லை தாண்டி வந்து 19 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக  08 ஆம் திகதியன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

அந்த வழக்கானது இன்றையதினம்(22), ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய தினம் வழக்கு நடந்ததற்கு அமைவாக, IND /TN/10/MM/925 இலக்கத்தினை கொண்ட படகில் பயணித்த 7 இந்திய மீனவர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன் படகு அரசுடமையாக்கப்பட்டது.

IND /TN/10/MM/324 என்ற இலக்கத்தை கொண்ட படகில் பயணித்த 11 நபர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன் , படகின் ஓட்டுநருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.



இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடி. 18 இந்திய மீனவர்கள் விடுதலை. ஒருவருக்கு சிறை. கடந்த 07ஆம் திகதியன்று எல்லை தாண்டி வந்து 19 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக  08 ஆம் திகதியன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் அவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அந்த வழக்கானது இன்றையதினம்(22), ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இன்றைய தினம் வழக்கு நடந்ததற்கு அமைவாக, IND /TN/10/MM/925 இலக்கத்தினை கொண்ட படகில் பயணித்த 7 இந்திய மீனவர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன் படகு அரசுடமையாக்கப்பட்டது.IND /TN/10/MM/324 என்ற இலக்கத்தை கொண்ட படகில் பயணித்த 11 நபர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன் , படகின் ஓட்டுநருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement