• Nov 28 2024

20 மாடுகள் திருடப்பட்ட சம்பவம் - கால்நடை வைத்தியர் உட்பட ஐவர் கைது..!

Chithra / Feb 2nd 2024, 12:23 pm
image


20 மாடுகள்  திருடப்பட்ட சம்பவம் தொடர்பில்  பதவிய பிரிவின் கால்நடை வைத்தியர் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டு பதவிய பொலிஸாரால் கெபித்திகொல்லாவ  நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது கால்நடை மருத்துவரும் அவரது அலுவலக ஊழியரும்  தலா 500,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் தலையிட வேண்டாம் எனவும் நீதிவான்  இவர்களை எச்சரித்தார்.

ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் பெப்ரவரி 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது.

திருடப்பட்ட  பசுக்களைக் கொண்டு செல்வதற்கு சந்தேக நபரான கால்நடை வைத்தியர் போலி ஆவணங்களை வழங்கியுள்ளதாக  பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

20 மாடுகள் திருடப்பட்ட சம்பவம் - கால்நடை வைத்தியர் உட்பட ஐவர் கைது. 20 மாடுகள்  திருடப்பட்ட சம்பவம் தொடர்பில்  பதவிய பிரிவின் கால்நடை வைத்தியர் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டு பதவிய பொலிஸாரால் கெபித்திகொல்லாவ  நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதன்போது கால்நடை மருத்துவரும் அவரது அலுவலக ஊழியரும்  தலா 500,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் தலையிட வேண்டாம் எனவும் நீதிவான்  இவர்களை எச்சரித்தார்.ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் பெப்ரவரி 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது.திருடப்பட்ட  பசுக்களைக் கொண்டு செல்வதற்கு சந்தேக நபரான கால்நடை வைத்தியர் போலி ஆவணங்களை வழங்கியுள்ளதாக  பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement