• Jul 17 2025

தருமபுரம் வைத்தியசாலையின் குறைபாடுளை கேட்டறிந்த இளங்குமரன் எம்.பி

Chithra / Jun 21st 2025, 3:22 pm
image


கிளிநொச்சி- தருமபுரம் வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கேட்டு அறிந்துள்ளார்.

இன்றைய தினம் கண்டாவளை பிரதேசத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் குறித்த வைத்தியசாலையினுடைய நோயாளர் நலன்பு சங்கம் மற்றும் பொது மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வைத்தியசாலைக்குச் சென்று அங்கே இருக்கின்ற குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

அந்தவகையில் தர்மபுரம் வைத்தியசாலையில்  ஒரே ஒரு வைத்தியரே தற்பொழுது கடமை ஆற்றி வருகின்றார். இங்கு நாளாந்தம் 300க்கு அதிகமான வெளி நோயாளர்கள் வருகை தருவதாகவும் அவர்களுக்கான சிகிச்சையை பார்வையிடுவது மட்டுமின்றி வாராந்த சிகிச்சை  அவசர தேவை கருதி வரும் நோயாளர்களையும் பார்வையிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தொடர்ச்சியாக 24 மணி நேரமும் தம் கடமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.

மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கையில்,

இங்கு போதிய அளவிலான கட்டடங்கள் மற்றும் கட்டில் வசதிகள் அனைத்தும் காணப்பட்டிருந்த போதிலும் இங்கு போதிய வைத்தியர் பற்றாக்குறை காரணமாகவும் மற்றும் குருதி பரிசோதனை இல்லாத காரணத்தினால் இங்கிருந்து பல நோயாளர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு  செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்தனர். 

அத்துடன் வைத்தியசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடி உடனடியாக செய்ய வேண்டிய தீர்க்கக்கூடிய பிரச்சனைகளை தீர்த்து ஏனைய பிரச்சினைகளை அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதில் குறித்த வைத்தியசாலையினுடைய பொறுப்பு வைத்தியர் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.


தருமபுரம் வைத்தியசாலையின் குறைபாடுளை கேட்டறிந்த இளங்குமரன் எம்.பி கிளிநொச்சி- தருமபுரம் வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கேட்டு அறிந்துள்ளார்.இன்றைய தினம் கண்டாவளை பிரதேசத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் குறித்த வைத்தியசாலையினுடைய நோயாளர் நலன்பு சங்கம் மற்றும் பொது மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வைத்தியசாலைக்குச் சென்று அங்கே இருக்கின்ற குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.அந்தவகையில் தர்மபுரம் வைத்தியசாலையில்  ஒரே ஒரு வைத்தியரே தற்பொழுது கடமை ஆற்றி வருகின்றார். இங்கு நாளாந்தம் 300க்கு அதிகமான வெளி நோயாளர்கள் வருகை தருவதாகவும் அவர்களுக்கான சிகிச்சையை பார்வையிடுவது மட்டுமின்றி வாராந்த சிகிச்சை  அவசர தேவை கருதி வரும் நோயாளர்களையும் பார்வையிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தொடர்ச்சியாக 24 மணி நேரமும் தம் கடமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கையில்,இங்கு போதிய அளவிலான கட்டடங்கள் மற்றும் கட்டில் வசதிகள் அனைத்தும் காணப்பட்டிருந்த போதிலும் இங்கு போதிய வைத்தியர் பற்றாக்குறை காரணமாகவும் மற்றும் குருதி பரிசோதனை இல்லாத காரணத்தினால் இங்கிருந்து பல நோயாளர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு  செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்தனர். அத்துடன் வைத்தியசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடி உடனடியாக செய்ய வேண்டிய தீர்க்கக்கூடிய பிரச்சனைகளை தீர்த்து ஏனைய பிரச்சினைகளை அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதில் குறித்த வைத்தியசாலையினுடைய பொறுப்பு வைத்தியர் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement