• Apr 30 2026

இலங்கை கடல் எல்லைக்குள் ஐந்து இந்திய மீனவர்கள் கைது

Chithra / Mar 12th 2026, 11:00 am
image


இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த தமிழ்நாட்டின் ராமேஷ்வரத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் குறித்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களின் படகை வழிமறித்துள்ளனர்.


மேற்குறித்த மீனவர்களை கைது செய்துள்ளதோடு, அவர்களின் இயந்திர மீன்பிடிப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


கைதான மீனவர்கள் மேலதிக விசாரணைக்காக மன்னாரிலுள்ள கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


இலங்கை கடல் எல்லைக்குள் ஐந்து இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த தமிழ்நாட்டின் ராமேஷ்வரத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் குறித்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களின் படகை வழிமறித்துள்ளனர்.மேற்குறித்த மீனவர்களை கைது செய்துள்ளதோடு, அவர்களின் இயந்திர மீன்பிடிப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான மீனவர்கள் மேலதிக விசாரணைக்காக மன்னாரிலுள்ள கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement