• May 04 2025

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது

Chithra / May 3rd 2025, 12:23 pm
image


உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (02) காலை 6 மணி முதல் இன்று (03) காலை 6 மணி வரை தேர்தல் விதி மீறல்கள் உள்ளிட்ட முறைப்பாடுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்தல் தொடர்பான 08 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் விதி மீறல் தொடர்பான 27 முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன.

அந்த முறைப்பாடுகள் தொடர்பாக ஐந்து வேட்பாளர்களும் 22 அரசியல் கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக இதுவரை 43 வேட்பாளர்கள் உட்பட 233 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (02) காலை 6 மணி முதல் இன்று (03) காலை 6 மணி வரை தேர்தல் விதி மீறல்கள் உள்ளிட்ட முறைப்பாடுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்தல் தொடர்பான 08 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் விதி மீறல் தொடர்பான 27 முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன.அந்த முறைப்பாடுகள் தொடர்பாக ஐந்து வேட்பாளர்களும் 22 அரசியல் கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக இதுவரை 43 வேட்பாளர்கள் உட்பட 233 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement