இன்று (25) ஏற்பட்ட விமான தாமதம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தற்காலிக மற்றும் திட்டமிடப்படாத செயற்பாடுகள் காரணமாக இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையினாலும் இது ஏற்படவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாமதத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அனைத்து பயணிகளிடமும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மன்னிப்பு கோருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாத வகையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 4 விமானங்கள் இன்று (25) காலை தாமதமாக தமது சேவையை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
விமான சேவையில் தாமதம். மன்னிப்பு கோரியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன்று (25) ஏற்பட்ட விமான தாமதம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.தற்காலிக மற்றும் திட்டமிடப்படாத செயற்பாடுகள் காரணமாக இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையினாலும் இது ஏற்படவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.தாமதத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அனைத்து பயணிகளிடமும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மன்னிப்பு கோருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாத வகையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 4 விமானங்கள் இன்று (25) காலை தாமதமாக தமது சேவையை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.