ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இரண்டு வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளும் அவர்,
அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கு அரசு முறை பயணத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதி செப்டம்பர் 23 ஆம் திகதியன்று அமெரிக்காவுக்குச் செல்வார், மேலும் 24 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.
பொதுச் சபையின் கூட்டத்துக்கு புறம்பாக அவர் பல உலகத் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நியூயோர்க்கிலிருந்து, செப்டம்பர் 27 ஆம் திகதியன்று ஜப்பானின் ஒசாகாவுக்குச் செல்லும் ஜனாதிபதி, அங்கு அவர் எக்ஸ்போ 2025 இல் கலந்து கொள்ளவுள்ளார்.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் திகதி ஜப்பான் பிரதமர் சிகெரு இசிபாவின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு செல்லும் அவர், செப்டம்பர் 29 ஆம் திகதி ஜப்பானிய பிரதமருடன் சந்திப்பை நடத்தவுள்ளளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க்கை தொடர்ந்து ஜப்பான்; செப்டம்பரில் ஜனாதிபதியின் இரண்டு வெளிநாட்டு பயணங்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இரண்டு வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளும் அவர், அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கு அரசு முறை பயணத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதி செப்டம்பர் 23 ஆம் திகதியன்று அமெரிக்காவுக்குச் செல்வார், மேலும் 24 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார். பொதுச் சபையின் கூட்டத்துக்கு புறம்பாக அவர் பல உலகத் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நியூயோர்க்கிலிருந்து, செப்டம்பர் 27 ஆம் திகதியன்று ஜப்பானின் ஒசாகாவுக்குச் செல்லும் ஜனாதிபதி, அங்கு அவர் எக்ஸ்போ 2025 இல் கலந்து கொள்ளவுள்ளார். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் திகதி ஜப்பான் பிரதமர் சிகெரு இசிபாவின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு செல்லும் அவர், செப்டம்பர் 29 ஆம் திகதி ஜப்பானிய பிரதமருடன் சந்திப்பை நடத்தவுள்ளளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.