• Feb 06 2025

நாட்டில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்கள் - ஆரம்பமானது விசேட சுற்றிவளைப்பு

Chithra / Dec 8th 2024, 8:49 am
image


பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களைச் சுற்றி விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களைச் சரிபார்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக சுமார் 1,750 கள பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டார்.

பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக உபுல் ரோஹண  தெரிவித்தார்.

டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 150இற்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்கள் - ஆரம்பமானது விசேட சுற்றிவளைப்பு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களைச் சுற்றி விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களைச் சரிபார்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதற்காக சுமார் 1,750 கள பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டார்.பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக உபுல் ரோஹண  தெரிவித்தார்.டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 150இற்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement