இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்பின்மை வீதம் பெருந்தோட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.
உலக உணவுத் திட்டம் தனது 2023 ஆண்டுக்கான வீட்டு உணவுப் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை மாதிரிக் குடும்பங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த ஆண்டில் 24 வீத குடும்பங்கள் மட்டமளவில் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதம் மார்ச் மாதத்தில் 17 சதவீதமாக காணப்பட்டதுடன், ஓகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 24 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
அத்தோடு, ஆண் தலைமைத்துவ குடும்பங்களில் 23 வீதமாகவும் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் 32 வீதமாகவும் உணவு பாதுகாப்பின்மை காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 26 சதவீத குடும்பங்களில் போதுமானளவு உணவு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை எனவும் உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பு. உலக உணவுத் திட்டம் மதிப்பீட்டு இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்பின்மை வீதம் பெருந்தோட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.உலக உணவுத் திட்டம் தனது 2023 ஆண்டுக்கான வீட்டு உணவுப் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை மாதிரிக் குடும்பங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.அதற்கமைய, கடந்த ஆண்டில் 24 வீத குடும்பங்கள் மட்டமளவில் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வீதம் மார்ச் மாதத்தில் 17 சதவீதமாக காணப்பட்டதுடன், ஓகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 24 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.அத்தோடு, ஆண் தலைமைத்துவ குடும்பங்களில் 23 வீதமாகவும் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் 32 வீதமாகவும் உணவு பாதுகாப்பின்மை காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 26 சதவீத குடும்பங்களில் போதுமானளவு உணவு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை எனவும் உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.