• Sep 21 2024

நிரந்தர அரசியல் தீர்வில்லாத தமிழர்களுக்கு சுதந்திர தினம் கரி நாளே! - வேலன் சுவாமிகள்

Chithra / Feb 1st 2023, 5:15 pm
image

Advertisement

எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கை அரசால் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள சுதந்திரதினத்தினை தமிழர்கள் கரிநாளாக கடைப்பிடித்து யாழ் பல்கலை மாணவர்களோடு ஏனைய அமைப்புகள் முன்னெடுக்கும் எதிர்பு போராட்டத்திற்கு பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரை  மக்கள் பேரெழிச்சி இயக்கம் முழு ஆதரவினை வழக்கும்மென வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். 

இன்று சமூகம் ஊடகத்திற்கு கருத்து வெளியிடும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

இலங்கையின் சுதந்திர தினம் எதிர்வரும் 4 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஈழத்தமிழராகிய எம்மை பொறுத்த வரை இலங்கையின் சுதந்திர தினமானது தொடர்ந்து 75 வருடங்களாக கரி நாளாகவே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. 

இவ்வருடமும் சுதந்திர தினத்தினை கரி நாளாக தமிழ் உறவுகள் அனைத்தும் அனுஷ்டிக்க வேண்டும் என கேட்டு கொள்கின்றோம். 

குறிப்பாக வரும் 4 ஆம் திகதி வர்த்தகர்கள் கடைகள் மற்றும் நிறுவனங்களினை மூடி தம் பகிஷ்கரிப்பையும், கரி நாளையும்  வெளிப்படுத்துமாறும் வர்த்தக நிலையம், தனியார் நிறுவனம் போன்றவற்றில் கறுப்பு கொடியினை பறக்க விட்டு எம் எதிர்ப்பினை அமைதியுடன் கூடிய அற வழியில் வெளிப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.

யாழ் மற்றும்  வடக்கு கிழக்கு பல்கலைக்கழக  மாணவர்கள், பாதிக்கப்பட்ட தரப்புகள், சிவில் சமூகங்கள் அனைத்தும் இணைந்து மாபெரும் எழுச்சி பேரணியினை ஒழுங்கு செய்துகொண்டிருக்கின்றனர். 

வரும் 4 ஆம் திகதி காலை யாழ்பாணத்திலிருந்து மட்டக்களப்பினை நோக்கி நடைபெறவுள்ள பேரணியிற்கு 

தமிழ் பற்றாளர்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். 

இந்து இளைஞர் மன்றங்கள், மீனவர் சங்கங்கள், தனியார் கல்வி நிறுவன மாணவர்கள், விளையாட்டு சங்கங்கள், தனியார் கல்வி நிறுவன மாணவர்கள் என அனைத்து கிராம மட்ட கட்டமைப்புகளும் ஆதரவினை வழங்குவதோடு, பேரணி எந்த எந்த இடங்களிலே இடம்பெறுகின்றது என்பதனை ஊடகங்கள் வாயிலாக அறிந்து அந்த இடங்களில் ஒன்று திரள வேண்டியதவசியம்.

சுதந்திர தினத்தினை எதிர்த்து கரிநாளினை வெளிப்படுத்தும் அதே வேளை, எம் மக்கள் தாயகத்தில் எதிர்கொள்ளுகின்ற காணி அபகரிப்பு நிறுத்தப்பட வேண்டும், அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் எவ் நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான நீதி வேண்டும். மற்றும் எம்மீம் மேய்ச்சல் தரை நிலங்கள்,கடல் வளங்கள் அனைத்தையும் நாங்களே பயன்படுத்துமாறு உரிமைகள் வழங்கப்பட வேண்டும். 

அத்தோடு அரச இயந்திரங்கள், திணைக்களங்கள், இராணுவங்கள் போன்றவற்றின் மூலம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளினை முன்வைகின்றோம்.

தமிழர்களின் அடிப்படை தேசிய  இன பிரச்சினைக்கான தீர்வாக மரபு வழித்தாயகம், சுயநிர்ணய உரிமை,  தமிழ் தேசிய இனம் என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும். 

நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும் என்பன போன்ற  கோரிக்கைகளினை பிரதானமாக முன்னெடுக்கப்படும் இவ்  போரட்டம் அனைவரது ஒத்துழைப்புடனும்  தமிழின எழுச்சியாக முன்னெடுக்க வேண்டும். 

சிவில் சமூகங்களும், அமைப்புகளும் தமது ஆதரவினை ஊடக சந்திப்புகள் மூலம் வழங்குவதன் மூலமே மக்கள் உணர்ச்சி வெளி கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

அத்தோடு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழிச்சி இயக்கம் இப்போராட்டத்திற்கு முழு ஆதரவினையும் வழங்கும் எனவும் மேலும் தெரிவித்திருந்தார்.

நிரந்தர அரசியல் தீர்வில்லாத தமிழர்களுக்கு சுதந்திர தினம் கரி நாளே - வேலன் சுவாமிகள் எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கை அரசால் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள சுதந்திரதினத்தினை தமிழர்கள் கரிநாளாக கடைப்பிடித்து யாழ் பல்கலை மாணவர்களோடு ஏனைய அமைப்புகள் முன்னெடுக்கும் எதிர்பு போராட்டத்திற்கு பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரை  மக்கள் பேரெழிச்சி இயக்கம் முழு ஆதரவினை வழக்கும்மென வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். இன்று சமூகம் ஊடகத்திற்கு கருத்து வெளியிடும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் சுதந்திர தினம் எதிர்வரும் 4 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஈழத்தமிழராகிய எம்மை பொறுத்த வரை இலங்கையின் சுதந்திர தினமானது தொடர்ந்து 75 வருடங்களாக கரி நாளாகவே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இவ்வருடமும் சுதந்திர தினத்தினை கரி நாளாக தமிழ் உறவுகள் அனைத்தும் அனுஷ்டிக்க வேண்டும் என கேட்டு கொள்கின்றோம். குறிப்பாக வரும் 4 ஆம் திகதி வர்த்தகர்கள் கடைகள் மற்றும் நிறுவனங்களினை மூடி தம் பகிஷ்கரிப்பையும், கரி நாளையும்  வெளிப்படுத்துமாறும் வர்த்தக நிலையம், தனியார் நிறுவனம் போன்றவற்றில் கறுப்பு கொடியினை பறக்க விட்டு எம் எதிர்ப்பினை அமைதியுடன் கூடிய அற வழியில் வெளிப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.யாழ் மற்றும்  வடக்கு கிழக்கு பல்கலைக்கழக  மாணவர்கள், பாதிக்கப்பட்ட தரப்புகள், சிவில் சமூகங்கள் அனைத்தும் இணைந்து மாபெரும் எழுச்சி பேரணியினை ஒழுங்கு செய்துகொண்டிருக்கின்றனர். வரும் 4 ஆம் திகதி காலை யாழ்பாணத்திலிருந்து மட்டக்களப்பினை நோக்கி நடைபெறவுள்ள பேரணியிற்கு தமிழ் பற்றாளர்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். இந்து இளைஞர் மன்றங்கள், மீனவர் சங்கங்கள், தனியார் கல்வி நிறுவன மாணவர்கள், விளையாட்டு சங்கங்கள், தனியார் கல்வி நிறுவன மாணவர்கள் என அனைத்து கிராம மட்ட கட்டமைப்புகளும் ஆதரவினை வழங்குவதோடு, பேரணி எந்த எந்த இடங்களிலே இடம்பெறுகின்றது என்பதனை ஊடகங்கள் வாயிலாக அறிந்து அந்த இடங்களில் ஒன்று திரள வேண்டியதவசியம்.சுதந்திர தினத்தினை எதிர்த்து கரிநாளினை வெளிப்படுத்தும் அதே வேளை, எம் மக்கள் தாயகத்தில் எதிர்கொள்ளுகின்ற காணி அபகரிப்பு நிறுத்தப்பட வேண்டும், அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் எவ் நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான நீதி வேண்டும். மற்றும் எம்மீம் மேய்ச்சல் தரை நிலங்கள்,கடல் வளங்கள் அனைத்தையும் நாங்களே பயன்படுத்துமாறு உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அத்தோடு அரச இயந்திரங்கள், திணைக்களங்கள், இராணுவங்கள் போன்றவற்றின் மூலம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளினை முன்வைகின்றோம்.தமிழர்களின் அடிப்படை தேசிய  இன பிரச்சினைக்கான தீர்வாக மரபு வழித்தாயகம், சுயநிர்ணய உரிமை,  தமிழ் தேசிய இனம் என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும். நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும் என்பன போன்ற  கோரிக்கைகளினை பிரதானமாக முன்னெடுக்கப்படும் இவ்  போரட்டம் அனைவரது ஒத்துழைப்புடனும்  தமிழின எழுச்சியாக முன்னெடுக்க வேண்டும். சிவில் சமூகங்களும், அமைப்புகளும் தமது ஆதரவினை ஊடக சந்திப்புகள் மூலம் வழங்குவதன் மூலமே மக்கள் உணர்ச்சி வெளி கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அத்தோடு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழிச்சி இயக்கம் இப்போராட்டத்திற்கு முழு ஆதரவினையும் வழங்கும் எனவும் மேலும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement