• Sep 21 2024

ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் வாகனத்தில் ஏறி ஓடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

Tamil nila / Feb 1st 2023, 5:17 pm
image

Advertisement

தமிழ் மக்களின் புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது அதை நிராகரித்து வாகனத்தில் ஏறி ஓடிச் சென்றுள்ளார்.


இன்று மட்டக்களப்பு ஆரயம்பதியில் இடம் பெற்ற தேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இடம்பெற்றது.


 குறித்த கூட்டம் நிறைவு பெற்றதும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை இன மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சனை தொடர்பாகவும் 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் சுதந்திர தினத்துக்கு முன்பாக ஜனாதிபதி தீர்வு ஒன்றை வழங்குவதாக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பு கோரிய விடயம் தொடர்பாகவும் கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவரிடம் கேட்க முற்பட்ட போது அதை அவர் நிராகரித்து சென்றுள்ளார் .


மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் தன்னுடைய தலைமையில் ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மேடைகளில் பிரச்சாரம் செய்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பிராந்திய ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் வாகனத்தில் ஏறிச் சென்றமை ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எதிர் கட்சித் தலைவர் இன்று நடந்து கொண்ட விதம் தொடர்பாக ஊடகவியலாளர் மத்தியில் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.


 இவ்வாறு ஊடகவியலாளர்களுடன் நடந்து கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் ஜனாதிபதி ஆனால் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுவர் சிறுபான்மையான தமிழினத்திற்கு எவ்வாறான தீர்வுகளை வழங்குவார் என்ற சந்தேகங்களும் எழும்பியுள்ளது.


 மேடைகளில் ஏறி வீரவசனம் பேசும் எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பிராந்திய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றது ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறைக்கு அவர் மதிப்பளிக்கும் விதம் குறித்தும் பாரிய சந்தேகம் கலந்துள்ளது.

ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் வாகனத்தில் ஏறி ஓடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தமிழ் மக்களின் புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது அதை நிராகரித்து வாகனத்தில் ஏறி ஓடிச் சென்றுள்ளார்.இன்று மட்டக்களப்பு ஆரயம்பதியில் இடம் பெற்ற தேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இடம்பெற்றது. குறித்த கூட்டம் நிறைவு பெற்றதும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை இன மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சனை தொடர்பாகவும் 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் சுதந்திர தினத்துக்கு முன்பாக ஜனாதிபதி தீர்வு ஒன்றை வழங்குவதாக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பு கோரிய விடயம் தொடர்பாகவும் கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவரிடம் கேட்க முற்பட்ட போது அதை அவர் நிராகரித்து சென்றுள்ளார் .மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் தன்னுடைய தலைமையில் ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மேடைகளில் பிரச்சாரம் செய்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பிராந்திய ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் வாகனத்தில் ஏறிச் சென்றமை ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எதிர் கட்சித் தலைவர் இன்று நடந்து கொண்ட விதம் தொடர்பாக ஊடகவியலாளர் மத்தியில் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இவ்வாறு ஊடகவியலாளர்களுடன் நடந்து கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் ஜனாதிபதி ஆனால் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுவர் சிறுபான்மையான தமிழினத்திற்கு எவ்வாறான தீர்வுகளை வழங்குவார் என்ற சந்தேகங்களும் எழும்பியுள்ளது. மேடைகளில் ஏறி வீரவசனம் பேசும் எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பிராந்திய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றது ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறைக்கு அவர் மதிப்பளிக்கும் விதம் குறித்தும் பாரிய சந்தேகம் கலந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement