• May 13 2024

அமைதியின்மையின் போது அரசியலமைப்பு செயல்முறைகளை கடைப்பிடித்தோம் – ஐ.நா.வில் சப்ரி

Chithra / Feb 1st 2023, 5:28 pm
image

Advertisement

அமைதியின்மையின் போது அரசியலமைப்பு செயல்முறைகளுக்கு இணங்கி செயற்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் மீதான பொது நம்பிக்கையை அதிகரிக்கவும், நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் ஜனநாயக ஆட்சி மற்றும் நிதிப் பொறுப்புணர்வை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக, உலகளாவிய காலமுறை தொடர்பான ஜெனிவாவில் இன்று நடைபெறும் 42வது அமர்வில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான ஒத்துழைப்பு, அரசியல் சீர்திருத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

பாலின அடிப்படையிலான வன்முறையைக் கையாள்வது மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்கான முயற்சிகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

அமைதியின்மையின் போது அரசியலமைப்பு செயல்முறைகளை கடைப்பிடித்தோம் – ஐ.நா.வில் சப்ரி அமைதியின்மையின் போது அரசியலமைப்பு செயல்முறைகளுக்கு இணங்கி செயற்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் மீதான பொது நம்பிக்கையை அதிகரிக்கவும், நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.மேலும் ஜனநாயக ஆட்சி மற்றும் நிதிப் பொறுப்புணர்வை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக, உலகளாவிய காலமுறை தொடர்பான ஜெனிவாவில் இன்று நடைபெறும் 42வது அமர்வில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஐநா மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான ஒத்துழைப்பு, அரசியல் சீர்திருத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.பாலின அடிப்படையிலான வன்முறையைக் கையாள்வது மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்கான முயற்சிகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement