• Nov 17 2024

பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் பெண் தெரிவு

Chithra / Nov 15th 2024, 2:41 pm
image


பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த வித்யாரத்னா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இருவரும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ஒருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட,

 சமந்த வித்யாரத்னா - 208,247 வாக்குகளையும், கிட்ணன் செல்வராஜ் - 60,041 வாக்குகளையும், அம்பிகா சாமுவேல் - 58,201 வாக்குகளையும், ரவீந்திர பண்டார - 50,822 வாக்குகளையும், சுதத் பலகல்ல - 47,980 வாக்குகளையும், டினிந்து சமன் - 45,902 வாக்குகளையும், பெற்று ஆசனங்களை கைப்பறியுள்ளனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட  நயன வாசலதிலகே - 35,518 வாக்குகளையும், சமிந்த விஜேசிறி - 29,791 வாக்குகளையும், பெற்று ஆசனங்களை கைப்பறியுள்ளனர்.

மேலும்  புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சாமர சம்பத் தசநாயக்க 19,359 வாக்குகளை பெற்று ஆசனங்களை கைப்பறியுள்ளார்

கடந்த இரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் ஆளும் கட்சியில் போட்டியிட்ட இரு தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைப் போன்று இம்முறை தேசிய மக்கள் சக்தியின் சார்பாக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட கிட்ணன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல் ஆகியோர்  வெற்றி பெற்றுள்ளமை தமிழ் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக  தமிழ் பெண் பிரதிநிதியாக அம்பிகா சாமுவேல் தெரிவாகியுள்ளமை மலையக பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு சான்றாக அமைந்துள்ளது. 

 

பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் பெண் தெரிவு பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த வித்யாரத்னா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இருவரும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ஒருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட, சமந்த வித்யாரத்னா - 208,247 வாக்குகளையும், கிட்ணன் செல்வராஜ் - 60,041 வாக்குகளையும், அம்பிகா சாமுவேல் - 58,201 வாக்குகளையும், ரவீந்திர பண்டார - 50,822 வாக்குகளையும், சுதத் பலகல்ல - 47,980 வாக்குகளையும், டினிந்து சமன் - 45,902 வாக்குகளையும், பெற்று ஆசனங்களை கைப்பறியுள்ளனர்.இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட  நயன வாசலதிலகே - 35,518 வாக்குகளையும், சமிந்த விஜேசிறி - 29,791 வாக்குகளையும், பெற்று ஆசனங்களை கைப்பறியுள்ளனர்.மேலும்  புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சாமர சம்பத் தசநாயக்க 19,359 வாக்குகளை பெற்று ஆசனங்களை கைப்பறியுள்ளார்கடந்த இரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் ஆளும் கட்சியில் போட்டியிட்ட இரு தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைப் போன்று இம்முறை தேசிய மக்கள் சக்தியின் சார்பாக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட கிட்ணன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல் ஆகியோர்  வெற்றி பெற்றுள்ளமை தமிழ் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக  தமிழ் பெண் பிரதிநிதியாக அம்பிகா சாமுவேல் தெரிவாகியுள்ளமை மலையக பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு சான்றாக அமைந்துள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement