• Oct 03 2024

வெளிநாட்டு மோகம் - கொழும்பு அழகுக்கலை நிபுணரிடம் பல இலட்சங்களை இழந்த யாழ்ப்பாண ஆசிரியர்..!

Chithra / Jan 18th 2024, 1:43 pm
image

Advertisement

 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்சம் ரூபா  பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை  பொலிஸார்  நேற்று  கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தன்னை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி தன்னிடம் இருந்து 42 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று, 

கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஏமாற்றி விட்டார் என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அழகுக்கலை நிபுணரை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது, அவர் பல்வேறு நபர்களிடமும் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் அவரது தனிப்பட்ட வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் பண பரிமாற்றங்களும் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாட்டு மோகம் - கொழும்பு அழகுக்கலை நிபுணரிடம் பல இலட்சங்களை இழந்த யாழ்ப்பாண ஆசிரியர்.  யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்சம் ரூபா  பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை  பொலிஸார்  நேற்று  கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,தன்னை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி தன்னிடம் இருந்து 42 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று, கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஏமாற்றி விட்டார் என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார்.முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அழகுக்கலை நிபுணரை கைது செய்தனர்.கைதுசெய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது, அவர் பல்வேறு நபர்களிடமும் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.அத்துடன் அவரது தனிப்பட்ட வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் பண பரிமாற்றங்களும் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement