• Nov 01 2024

இனி வெளிநாட்டு பொருட்கள் உடனடியாக வீடுகளுக்கு வராது- டோ டு டோ' முறை இடைநிறுத்தம்! samugammedia

Tamil nila / Nov 25th 2023, 11:14 am
image

Advertisement

பொருட்கள் விநியோக முறையான “Door to Door” முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்ச்சியான பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் அதன் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கருத்திற்கொண்டு, “டோ டு டோ” விநியோக முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அனுப்பப்படும் பொருட்களுக்கு இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அதற்கு முன்னர் அனுப்பப்படும் பொருட்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், டிசம்பர் முதலாம் திகதி முதல் அனுப்பப்படும் பொருட்களை இலங்கை சுங்கத்தின் சாதாரண சரக்கு முறையின் மூலம் இலங்கைக்கு அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வெளிநாட்டு பொருட்கள் உடனடியாக வீடுகளுக்கு வராது- டோ டு டோ' முறை இடைநிறுத்தம் samugammedia பொருட்கள் விநியோக முறையான “Door to Door” முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.தொடர்ச்சியான பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் அதன் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கருத்திற்கொண்டு, “டோ டு டோ” விநியோக முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அனுப்பப்படும் பொருட்களுக்கு இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அதற்கு முன்னர் அனுப்பப்படும் பொருட்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், டிசம்பர் முதலாம் திகதி முதல் அனுப்பப்படும் பொருட்களை இலங்கை சுங்கத்தின் சாதாரண சரக்கு முறையின் மூலம் இலங்கைக்கு அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement