• Oct 31 2024

கொழும்பில் வர்த்தகரின் வீட்டில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள்!

Chithra / Oct 31st 2024, 7:54 am
image

Advertisement


கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது இன்று காலை இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீகொட, பட்டவல பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டின் மீது நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் வீட்டில் இருந்த எவரும் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வர்த்தகரை அச்சுறுத்தும் நோக்கில், குறித்த வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கொழும்பில் வர்த்தகரின் வீட்டில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது இன்று காலை இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மீகொட, பட்டவல பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டின் மீது நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.எனினும் வீட்டில் இருந்த எவரும் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.குறித்த வர்த்தகரை அச்சுறுத்தும் நோக்கில், குறித்த வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement