• Jan 23 2025

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி கைது!

Chithra / Jan 23rd 2025, 6:59 am
image


2014 ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் அவரது மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிங்கிரிய மற்றும் நாரம்மல பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாகக் 

கூறி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த நிதி பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், இந்த நிதி 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள், சந்தேகநபர்கள் இன்று  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி கைது 2014 ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் அவரது மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிங்கிரிய மற்றும் நாரம்மல பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாகக் கூறி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த நிதி பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த நிதி 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள், சந்தேகநபர்கள் இன்று  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement