• Jan 13 2025

ரணிலையும் சஜித்தையும் ஒன்றிணைக்க களமிறங்கிய முன்னாள் அமைச்சர்!

Chithra / Jan 10th 2025, 8:03 am
image

 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்று பல கட்சிகள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே சேனாரத்ன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து அரசியல் தரப்புகளால் பேசப்பட்டு வரும் நிலையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசியல் கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பாக கலந்துரையாடல்களை தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கடந்த தேர்தல்களில் முக்கிய அரசியல் கட்சிகள் பெற்ற பின்னடைவுகளைக் கருத்தில் கொண்டு, சில கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சி 'யானை' சின்னத்தில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், முந்தைய தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியை விட ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலையில் இருந்ததால், மற்ற கட்சிகள் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

ரணிலையும் சஜித்தையும் ஒன்றிணைக்க களமிறங்கிய முன்னாள் அமைச்சர்  எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்று பல கட்சிகள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே சேனாரத்ன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து அரசியல் தரப்புகளால் பேசப்பட்டு வரும் நிலையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அரசியல் கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பாக கலந்துரையாடல்களை தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும், கடந்த தேர்தல்களில் முக்கிய அரசியல் கட்சிகள் பெற்ற பின்னடைவுகளைக் கருத்தில் கொண்டு, சில கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சி 'யானை' சின்னத்தில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும், முந்தைய தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியை விட ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலையில் இருந்ததால், மற்ற கட்சிகள் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement