• Sep 20 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் எம்.பி. லயனல் பிரேமசிறி

Chithra / Jun 19th 2024, 2:34 pm
image

Advertisement


முன்னாள் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான லயனல் பிரேமசிறி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டார்.

காலி மஹிந்த வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் தொழில் ரீதியாக சட்டத்தரணியாவார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்த அவர் காலி மேயராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து மீண்டும் காலி மாவட்ட மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

லயனல் பிரேமசிறி 2004இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து 2007 - 2010 காலப்பகுதியில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலன் பிரதி அமைச்சராக கடமையாற்றினார்.

கனடாவின் பிரதி உயர்ஸ்தானிகராகவும் சில காலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.


ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் எம்.பி. லயனல் பிரேமசிறி முன்னாள் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான லயனல் பிரேமசிறி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டார்.காலி மஹிந்த வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் தொழில் ரீதியாக சட்டத்தரணியாவார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்த அவர் காலி மேயராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து மீண்டும் காலி மாவட்ட மேயராக தெரிவு செய்யப்பட்டார்.லயனல் பிரேமசிறி 2004இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார்.அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து 2007 - 2010 காலப்பகுதியில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலன் பிரதி அமைச்சராக கடமையாற்றினார்.கனடாவின் பிரதி உயர்ஸ்தானிகராகவும் சில காலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement