• Apr 30 2025

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால உயர் நீதிமன்றில் முன்னிலை

Chithra / Apr 29th 2025, 11:12 am
image

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணை ஒன்றிற்காக இன்று காலை உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

உயர் நீதிமன்றம் இதற்கு முன்னர் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய மைத்திரிபால சிறிசேன இன்று (29) இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியை மன்னித்து விடுதலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மனு தொடர்பாக உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை ரத்து செய்ததிலிருந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால உயர் நீதிமன்றில் முன்னிலை  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணை ஒன்றிற்காக இன்று காலை உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.உயர் நீதிமன்றம் இதற்கு முன்னர் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய மைத்திரிபால சிறிசேன இன்று (29) இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியை மன்னித்து விடுதலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மனு தொடர்பாக உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை ரத்து செய்ததிலிருந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement