• Apr 29 2025

சம்பூர் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு: சந்தேக நபர் கைது..!

Sharmi / Apr 29th 2025, 11:30 am
image

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள நல்லூர் கலப்புக் கடல் பகுதியில் சட்டவிரோமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் நேற்று(28) முற்றுகையிட்டு பெருந்தொகை கசிப்பை மீட்டுள்ளதாகவும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.பீ.டி. சந்திரசிறியின் ஆலோசணைக்கமைவாக சம்பூர் பொலிஸார் இவ் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது நான்கு பரல்களிலிருந்து கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடா 757 போத்தல், கசிப்பு 31 போத்தர் மற்றும் வயர் உள்ளிட்ட உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.

அத்தோடு சம்பூர் - நல்லூர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



சம்பூர் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு: சந்தேக நபர் கைது. சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள நல்லூர் கலப்புக் கடல் பகுதியில் சட்டவிரோமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் நேற்று(28) முற்றுகையிட்டு பெருந்தொகை கசிப்பை மீட்டுள்ளதாகவும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.பீ.டி. சந்திரசிறியின் ஆலோசணைக்கமைவாக சம்பூர் பொலிஸார் இவ் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.இதன்போது நான்கு பரல்களிலிருந்து கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடா 757 போத்தல், கசிப்பு 31 போத்தர் மற்றும் வயர் உள்ளிட்ட உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.அத்தோடு சம்பூர் - நல்லூர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement