ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் செயலாளர் எனக் கூறிக் கொண்ட ஒருவர் துப்பாக்கியுடன் முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லேரியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் முல்லேரியா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கார் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் மது போதையில் இருந்துள்ளதாகவும் காரிலிருந்து துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடையவர் ஆவார்.
அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கியை வைத்திருந்தமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக காரின் சாரதி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐ.தே.கவின் முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் செயலாளர் எனக் கூறிக் கொண்ட ஒருவர் துப்பாக்கியுடன் முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.முல்லேரியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் முல்லேரியா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கார் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் மது போதையில் இருந்துள்ளதாகவும் காரிலிருந்து துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடையவர் ஆவார்.அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கியை வைத்திருந்தமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக காரின் சாரதி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.