சட்ட விரோதமாக முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வர் நேற்று(18) இரவு பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவ ராணி காடு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
பொகவந்தலாவ ராணி காடு தோட்ட தெரேசியா பிரிவில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து அப் பகுதிக்கு சென்று சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிசார் அங்கு சட்ட விரோதமாக முறையில் மாணிக்க கற்கள் அகன்ற நால்வரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று(18) மதியம் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களை எதிர்வரும் 25 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு இடப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
சட்ட விரோத மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது. சட்ட விரோதமாக முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வர் நேற்று(18) இரவு பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவ ராணி காடு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.பொகவந்தலாவ ராணி காடு தோட்ட தெரேசியா பிரிவில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து அப் பகுதிக்கு சென்று சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிசார் அங்கு சட்ட விரோதமாக முறையில் மாணிக்க கற்கள் அகன்ற நால்வரை கைது செய்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று(18) மதியம் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.இந்நிலையில் அவர்களை எதிர்வரும் 25 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு இடப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.