• Dec 02 2024

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றி சென்ற நான்கு பேர் கைது

Chithra / Dec 2nd 2024, 4:07 pm
image

 

 

கிளிநொச்சி மாவட்டத்தின் புளியம்பொக்கனை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட பன்னிரண்டு சிறிய கன்றுகளை பொலிசார் மீட்டுள்ளனர்.

லொறி மற்றும் உழவு இயந்திரம் மூலம் கொண்டு செல்ல முற்பட்ட நான்கு பேர் இவ்வாறு தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கால்நடை உரிமையாளரின் விற்பனை செய்வதற்கான கடிதம், கால்நடை கொண்டு செல்வதற்காக கால்நடை வைத்தியரின் சிபாரிசு கடிதம் மற்றும் கால்நடைகளை கொண்டு செல்வதற்கான வாகனத்தில் தண்ணீர் உணவு என்பனவற்றை ஏற்படுத்திக் கொடுக்காமல் கொண்டு செல்லப்பட்ட குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர் நால்வரும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர்.


அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றி சென்ற நான்கு பேர் கைது   கிளிநொச்சி மாவட்டத்தின் புளியம்பொக்கனை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட பன்னிரண்டு சிறிய கன்றுகளை பொலிசார் மீட்டுள்ளனர்.லொறி மற்றும் உழவு இயந்திரம் மூலம் கொண்டு செல்ல முற்பட்ட நான்கு பேர் இவ்வாறு தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கால்நடை உரிமையாளரின் விற்பனை செய்வதற்கான கடிதம், கால்நடை கொண்டு செல்வதற்காக கால்நடை வைத்தியரின் சிபாரிசு கடிதம் மற்றும் கால்நடைகளை கொண்டு செல்வதற்கான வாகனத்தில் தண்ணீர் உணவு என்பனவற்றை ஏற்படுத்திக் கொடுக்காமல் கொண்டு செல்லப்பட்ட குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் நால்வரும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement