கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு தமிழர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதாக கனடா செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கனடா ஒன்ராறியோவிலுள்ள கிளாரிங்டன்(Clarington) என்னுமிடத்தில், கடந்த திங்கள் கிழமை இரவு, மதுபானக்கடை ஒன்றில் திருட முயன்ற நபரை பொலிஸார் பிடிக்க சென்ற வேளை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, எதிர் திசையில் இருந்து வந்த கார் ஒன்றின் மீது சந்தேகநபர் பயணித்த வான் மோதியதில் காரில் பயணித்த இந்திய தம்பதியர் மற்றும் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை விபத்தில் வானை ஓட்டிவந்த சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 60 மற்றும் 55 வயதுடைய இந்தியத் தம்பதியரும், அவர்களுடைய பேரனான மூன்று மாதக் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் ஒன்ராறியோவிலுள்ள Ajax இல் வசித்துவரும் குழந்தையின் பெற்றோரான 33 மற்றும் 27 வயதுடைய தம்பதியும் அதே காரில் பயணித்துள்ளதுடன் விபத்தில் காயமடைந்த அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை குறித்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரில் ஒரு இந்திய தம்பதியும் அவர்களது பேரக்குழந்தையும் அடங்குவதாக டொராண்டோவின் இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் டொராண்டோவின் இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நெடுஞ்சாலை விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணிவண்ணன், திருமதி.மகாலட்சுமி மற்றும் அவர்களது பேரக்குழந்தைகளின் துயர இழப்புக்கு இதயப்பூர்வமான இரங்கல்கள்.
நாங்கள் கனடிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்" என்று தூதரகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் துயருற்ற குடும்பத்தைச் சந்தித்து அனைத்து உதவிகளையும் உறுதி செய்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு தமிழர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழப்பு. கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு தமிழர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதாக கனடா செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கனடா ஒன்ராறியோவிலுள்ள கிளாரிங்டன்(Clarington) என்னுமிடத்தில், கடந்த திங்கள் கிழமை இரவு, மதுபானக்கடை ஒன்றில் திருட முயன்ற நபரை பொலிஸார் பிடிக்க சென்ற வேளை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது, எதிர் திசையில் இருந்து வந்த கார் ஒன்றின் மீது சந்தேகநபர் பயணித்த வான் மோதியதில் காரில் பயணித்த இந்திய தம்பதியர் மற்றும் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.அதேவேளை விபத்தில் வானை ஓட்டிவந்த சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 60 மற்றும் 55 வயதுடைய இந்தியத் தம்பதியரும், அவர்களுடைய பேரனான மூன்று மாதக் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் ஒன்ராறியோவிலுள்ள Ajax இல் வசித்துவரும் குழந்தையின் பெற்றோரான 33 மற்றும் 27 வயதுடைய தம்பதியும் அதே காரில் பயணித்துள்ளதுடன் விபத்தில் காயமடைந்த அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை குறித்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரில் ஒரு இந்திய தம்பதியும் அவர்களது பேரக்குழந்தையும் அடங்குவதாக டொராண்டோவின் இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் டொராண்டோவின் இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,நெடுஞ்சாலை விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணிவண்ணன், திருமதி.மகாலட்சுமி மற்றும் அவர்களது பேரக்குழந்தைகளின் துயர இழப்புக்கு இதயப்பூர்வமான இரங்கல்கள். நாங்கள் கனடிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்" என்று தூதரகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் துயருற்ற குடும்பத்தைச் சந்தித்து அனைத்து உதவிகளையும் உறுதி செய்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.