• Dec 19 2024

அதிக விலைக்கு அரிசி விற்பனை; நான்கு வர்த்தகர்களுக்கு தண்டப்பணம்..!

Sharmi / Dec 19th 2024, 9:43 am
image

அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த நான்கு வர்த்தகர்களுக்கு நான்கு இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நுவரெலியா நீதவான் பிரபுத்திகா லங்காங்கனி (18) அன்று உத்தரவிட்டார்.

ஒரு வர்த்தகருக்கு தலா 100,000 ரூபாய் அபராதமும், விலையை காட்சிப்படுத்தாத நான்கு வர்த்தகர்களுக்கு 80,000 ரூபாய் அபராதமும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

நுவரெலியா மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகாரசபை அலுவலகத்தின் மாவட்ட தலைவர் அமில ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைப்பு நடத்தி விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




அதிக விலைக்கு அரிசி விற்பனை; நான்கு வர்த்தகர்களுக்கு தண்டப்பணம். அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த நான்கு வர்த்தகர்களுக்கு நான்கு இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நுவரெலியா நீதவான் பிரபுத்திகா லங்காங்கனி (18) அன்று உத்தரவிட்டார்.ஒரு வர்த்தகருக்கு தலா 100,000 ரூபாய் அபராதமும், விலையை காட்சிப்படுத்தாத நான்கு வர்த்தகர்களுக்கு 80,000 ரூபாய் அபராதமும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.நுவரெலியா மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகாரசபை அலுவலகத்தின் மாவட்ட தலைவர் அமில ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைப்பு நடத்தி விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement