• May 17 2024

தாய்லாந்தில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி 19 இலட்சம் ரூபா மோசடி.!

Sharmi / Feb 7th 2023, 12:57 pm
image

Advertisement

தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சந்தேகநபர் சுற்றுலா விசாவில் அழைத்துச்சென்று அவர்களை நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக சந்தேகநபர் அம்பலாந்தோட்டை - நோனாகம - வெலிபட்டன்வில பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

பிரதான சந்தேகநபர் சுமார் 19 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது சம்பந்தப்பட்ட மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

தப்பியோடிய சந்தேக நபர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இம்முறை தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டவுள்ளவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் நேற்று ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், தற்போது லாவோஸில் சிக்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருமாறு சந்தேக நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தாய்லாந்தில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி 19 இலட்சம் ரூபா மோசடி. தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சந்தேகநபர் சுற்றுலா விசாவில் அழைத்துச்சென்று அவர்களை நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக சந்தேகநபர் அம்பலாந்தோட்டை - நோனாகம - வெலிபட்டன்வில பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.பிரதான சந்தேகநபர் சுமார் 19 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.இதன்போது சம்பந்தப்பட்ட மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.தப்பியோடிய சந்தேக நபர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இம்முறை தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டவுள்ளவர் என்பதும் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் நேற்று ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அத்துடன், தற்போது லாவோஸில் சிக்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருமாறு சந்தேக நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement