• May 17 2024

இலங்கையில் இலவசமாக ஒளிபரப்பான சீனத் தொலைக்காட்சி இடைநிறுத்தம்! samugammedia

Chithra / Apr 28th 2023, 9:51 am
image

Advertisement

இலங்கையில் பரீட்சார்த்தமாக  ஒளிபரப்பான சீனத் தொலைக்காட்சி சேவை நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் எந்தவொரு அறிவிப்பும் இன்றி கடந்த 10 தினங்களாக ஒளிபரப்பான சீனத் தொலைக்காட்சியே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தொலைக்காட்சிகளில் சீன அலைவரிசை ஒன்று இலவசமாக  பரீட்சார்த்த ஒளிபரப்பு சேவையை  ஆரம்பித்திருந்தது.

சீன ஒளிபரப்பு சேவையான சைனிஸ் குளோபல் ரெலிவிசன் நெற்வேற் அலைவரிசையை  கேபிள் இணைப்பு இன்றி ஒளிபரப்பாகியது.

இலங்கை அரச தொலைக்காட்சிகளான ரூபவாகினி, ஐ ரீவி மற்றும் நேத்ரா ஆகிய ஒரே குழும ரீவிகள் நாட்டில் யூ.எச்.எவ் இல் வெளிவருகின்றன.

இவ்வாறு வெளிவரும் ஒளிபரப்பு சேவையானது கடந்த பெப்ரவரியில் இருந்து அலைவரிசை பங்காளிகளை கோரியிருந்தனர். இதன்போது இந்த சீன ஒளிபரப்பு சேவை அதனை பற்றியிருக்கலாம் என நம்பப்பட்டது.

இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன அலைவரிசைகளிற்கு  5 இடத்தில் அலைவரிசை கோபுரங்கள் உண்டு அவை, கொழும்பு, மடேல்சிம் ( ஊவா) கொக்காவில், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அன்டனா (hantana) இந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே இவ்வாறு  இடம்பெற்ற  பரீட்சார்த்த ஒளிபரப்பு தெளிவாக இயங்கியது.

இவ்வாறு இயங்கிய  சைனிஸ் குளோபல் ரெலிவிசன் நெற்வேர்க் முன்னர் ஓர் தொலைபேசி நிறுவன இணைப்பு மூலம் கட்டண சேவையில் இயங்கியபோதும் இவை அனைத்தும்  தற்போது முழுமையாக தடைப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வெளியே புற நாடு ஒன்றில் இருந்து ஒளிபரப்பாகும் சமயம் செய்மதி அலைவரிசெயூடாக இலங்கைக்கும்  கடத்தப்பட்டு இங்கே ஒளிபரப்பப்பியதாக  தெரியவரும் இச் சேவை தொடர்பில் இந்தியா அதிக கரிசணை கோண்டு நோக்கிய சமயம் தற்போது அச் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டு அதே அலைவரிசையில் ஏஸ்.பி.சி என்னும் தொலைக்காட்சி சேவை ஒன்று ஒளிபரப்பாகின்றது.

இலங்கையில் இலவசமாக ஒளிபரப்பான சீனத் தொலைக்காட்சி இடைநிறுத்தம் samugammedia இலங்கையில் பரீட்சார்த்தமாக  ஒளிபரப்பான சீனத் தொலைக்காட்சி சேவை நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் எந்தவொரு அறிவிப்பும் இன்றி கடந்த 10 தினங்களாக ஒளிபரப்பான சீனத் தொலைக்காட்சியே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.இலங்கையின் தொலைக்காட்சிகளில் சீன அலைவரிசை ஒன்று இலவசமாக  பரீட்சார்த்த ஒளிபரப்பு சேவையை  ஆரம்பித்திருந்தது.சீன ஒளிபரப்பு சேவையான சைனிஸ் குளோபல் ரெலிவிசன் நெற்வேற் அலைவரிசையை  கேபிள் இணைப்பு இன்றி ஒளிபரப்பாகியது.இலங்கை அரச தொலைக்காட்சிகளான ரூபவாகினி, ஐ ரீவி மற்றும் நேத்ரா ஆகிய ஒரே குழும ரீவிகள் நாட்டில் யூ.எச்.எவ் இல் வெளிவருகின்றன.இவ்வாறு வெளிவரும் ஒளிபரப்பு சேவையானது கடந்த பெப்ரவரியில் இருந்து அலைவரிசை பங்காளிகளை கோரியிருந்தனர். இதன்போது இந்த சீன ஒளிபரப்பு சேவை அதனை பற்றியிருக்கலாம் என நம்பப்பட்டது.இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன அலைவரிசைகளிற்கு  5 இடத்தில் அலைவரிசை கோபுரங்கள் உண்டு அவை, கொழும்பு, மடேல்சிம் ( ஊவா) கொக்காவில், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அன்டனா (hantana) இந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாகவே இவ்வாறு  இடம்பெற்ற  பரீட்சார்த்த ஒளிபரப்பு தெளிவாக இயங்கியது.இவ்வாறு இயங்கிய  சைனிஸ் குளோபல் ரெலிவிசன் நெற்வேர்க் முன்னர் ஓர் தொலைபேசி நிறுவன இணைப்பு மூலம் கட்டண சேவையில் இயங்கியபோதும் இவை அனைத்தும்  தற்போது முழுமையாக தடைப்பட்டுள்ளது.இலங்கைக்கு வெளியே புற நாடு ஒன்றில் இருந்து ஒளிபரப்பாகும் சமயம் செய்மதி அலைவரிசெயூடாக இலங்கைக்கும்  கடத்தப்பட்டு இங்கே ஒளிபரப்பப்பியதாக  தெரியவரும் இச் சேவை தொடர்பில் இந்தியா அதிக கரிசணை கோண்டு நோக்கிய சமயம் தற்போது அச் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டு அதே அலைவரிசையில் ஏஸ்.பி.சி என்னும் தொலைக்காட்சி சேவை ஒன்று ஒளிபரப்பாகின்றது.

Advertisement

Advertisement

Advertisement