வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட செல்வச்சந்நிதி ஆலயத்தின் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள குளிர்களி விற்பனை நிலையத்தில் தவளையுடன் கூடிய குளிர்களி விற்றவருக்கு எதிராக இன்றைய தினம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரினால் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணையை தொடர்ந்து குறித்த தவளையுடன் கூடிய குளிர்களியை நுகர்வோருக்கு விற்பனை செய்த குளிர்களி முகாமையாளருக்கு 5000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
குறித்த குளிர்களி உற்பத்திநிலையம் சுன்னாகத்தில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சுன்னாகத்தில் உள்ள குளிர்களி உற்பத்தி நிலையத்தின் மீது சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் கேள்வி எழும்பியுள்ளனர்.
யாழில் தவளைக் குளிர்களி விற்றவருக்கு 5000 ரூபா தண்டம் - குளிர்களி உற்பத்தி நிலையம் மூடப்படுமா வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட செல்வச்சந்நிதி ஆலயத்தின் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள குளிர்களி விற்பனை நிலையத்தில் தவளையுடன் கூடிய குளிர்களி விற்றவருக்கு எதிராக இன்றைய தினம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரினால் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணையை தொடர்ந்து குறித்த தவளையுடன் கூடிய குளிர்களியை நுகர்வோருக்கு விற்பனை செய்த குளிர்களி முகாமையாளருக்கு 5000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. குறித்த குளிர்களி உற்பத்திநிலையம் சுன்னாகத்தில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சுன்னாகத்தில் உள்ள குளிர்களி உற்பத்தி நிலையத்தின் மீது சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் கேள்வி எழும்பியுள்ளனர்.