• Apr 15 2026

மரக்கறிகளின் விலையிலும் தாக்கம் செலுத்திய எரிபொருள் நெருக்கடி - விலை அதிகரிப்பு

Chithra / Mar 18th 2026, 8:58 pm
image


இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மரக்கறிகளின் விலையிலும் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


அதன்படி, ஒரு கிலோகிராம் கோவா நுவரெலியாவில் 150 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலயில் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


போஞ்சி ஒரு கிலோகிராம் கெப்பட்டிபொலயில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுடன்,  நுவரெலியாவில் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 260 ரூபாயக்கும் கெப்பட்டிபொலயில் 160 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.


இதேவேளை பீட்ரூட் ஒரு கிலோகிராம், நுவரெலியா மற்றும் கெப்பட்டிபொலயில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கறிமிளகாய் ஒரு கிலோகிராம் நுவரெலியாவில் 350 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலயில் 340 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


கெப்பட்டிபொலயில் கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 300 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒரு கிலோகிராம் 180 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோகிராம் 100 ரூபாய்க்கும் விற்பனையாகின.


நுவரெலியாவில் குடைமிளகாய் வகைகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டது.

மரக்கறிகளின் விலையிலும் தாக்கம் செலுத்திய எரிபொருள் நெருக்கடி - விலை அதிகரிப்பு இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மரக்கறிகளின் விலையிலும் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.அதன்படி, ஒரு கிலோகிராம் கோவா நுவரெலியாவில் 150 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலயில் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.போஞ்சி ஒரு கிலோகிராம் கெப்பட்டிபொலயில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுடன்,  நுவரெலியாவில் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 260 ரூபாயக்கும் கெப்பட்டிபொலயில் 160 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.இதேவேளை பீட்ரூட் ஒரு கிலோகிராம், நுவரெலியா மற்றும் கெப்பட்டிபொலயில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கறிமிளகாய் ஒரு கிலோகிராம் நுவரெலியாவில் 350 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலயில் 340 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.கெப்பட்டிபொலயில் கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 300 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒரு கிலோகிராம் 180 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோகிராம் 100 ரூபாய்க்கும் விற்பனையாகின.நுவரெலியாவில் குடைமிளகாய் வகைகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement