• Nov 26 2024

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை..! நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Dec 10th 2023, 1:11 pm
image

 

அடுத்தவருடம் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வற் திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதன்படி, கச்சா எண்ணெய் வடிவில் கொண்டு வரப்படும் எரிபொருளுக்கு இந்த வரி அறவிடப்படாது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

மருந்துகள், ஊனமுற்றோர் உபகரணங்கள், அரிசி, கோதுமை மா, மரக்கறிகள், பழங்கள், பால் மற்றும் அம்புலன்ஸ் சேவைகளுக்கு வற் வரி அறவிடப்படாது.

தொண்ணூற்று ஏழு பொருட்களுக்கு புதிய வற் வரி விதிப்பதன் மூலம் நாட்டின் பணவீக்கம் இரண்டு சதவீதம் அதிகரிக்கலாம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 


இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை. நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு  அடுத்தவருடம் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் வற் திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இதன்படி, கச்சா எண்ணெய் வடிவில் கொண்டு வரப்படும் எரிபொருளுக்கு இந்த வரி அறவிடப்படாது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதனை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.மருந்துகள், ஊனமுற்றோர் உபகரணங்கள், அரிசி, கோதுமை மா, மரக்கறிகள், பழங்கள், பால் மற்றும் அம்புலன்ஸ் சேவைகளுக்கு வற் வரி அறவிடப்படாது.தொண்ணூற்று ஏழு பொருட்களுக்கு புதிய வற் வரி விதிப்பதன் மூலம் நாட்டின் பணவீக்கம் இரண்டு சதவீதம் அதிகரிக்கலாம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement