• Nov 25 2024

ஜனாதிபதி ரணிலுக்கு முழு ஆதரவு..! லொஹான் ரத்வத்தே அறிவிப்பு

Chithra / May 4th 2024, 10:06 pm
image

  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர்  லோகன் ரத்வத்தே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (04) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"எனது வாழ்நாளில் உங்களுக்கு எதிராக செயற்பட்ட ஒருவன் நான். உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. 

இருப்பினும், இன்று உங்கள் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்." "எங்கள் கட்சியிலும் எங்கள் தவறுகள் உள்ளன.

அரசாங்கத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியாத போது நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டீர்கள்." “இன்று ஜனாதிபதி வேட்பாளர்களாக பலர். வாய் சாவால் விடுபவர்கள் இந்த நாட்டில் ஒரு வடிகானை கூட அமைக்கவில்லை.

இதனால் தான் இந்த நாட்டை மீண்டும் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதியிடம் கேட்கின்றோம். 

தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எனது சிறந்த ஆதரவைத் தருகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணிலுக்கு முழு ஆதரவு. லொஹான் ரத்வத்தே அறிவிப்பு   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர்  லோகன் ரத்வத்தே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (04) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"எனது வாழ்நாளில் உங்களுக்கு எதிராக செயற்பட்ட ஒருவன் நான். உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. இருப்பினும், இன்று உங்கள் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்." "எங்கள் கட்சியிலும் எங்கள் தவறுகள் உள்ளன.அரசாங்கத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியாத போது நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டீர்கள்." “இன்று ஜனாதிபதி வேட்பாளர்களாக பலர். வாய் சாவால் விடுபவர்கள் இந்த நாட்டில் ஒரு வடிகானை கூட அமைக்கவில்லை.இதனால் தான் இந்த நாட்டை மீண்டும் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதியிடம் கேட்கின்றோம். தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எனது சிறந்த ஆதரவைத் தருகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement