• Nov 22 2024

கொக்குக்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை...! சட்ட வைத்திய அதிகாரி தெரிவிப்பு...!

Sharmi / Feb 22nd 2024, 1:47 pm
image

முல்லைத்தீவு,  கொக்குதொடுவாய்  மனித புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வு பணிக்கான நிதியானது கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொக்குதொடுவாய்  மனித  புதைகுழி  அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம்(22)  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 

வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ,

கொக்குதொடுவாய்  மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அகழ்வு பணியினை கொண்டு நடாத்த நிதி கிடைக்கப்பெறவில்லை.

இது தொடர்பாக மாவட்ட செயலாளர்,  நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி நிதி கிடைக்கும் பட்சத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கொக்குதொடுவாய்  மனித புதைகுழியின்  அகழ்வு பணி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொக்குக்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை. சட்ட வைத்திய அதிகாரி தெரிவிப்பு. முல்லைத்தீவு,  கொக்குதொடுவாய்  மனித புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வு பணிக்கான நிதியானது கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கொக்குதொடுவாய்  மனித  புதைகுழி  அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம்(22)  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, கொக்குதொடுவாய்  மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அகழ்வு பணியினை கொண்டு நடாத்த நிதி கிடைக்கப்பெறவில்லை. இது தொடர்பாக மாவட்ட செயலாளர்,  நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். திட்டமிட்டபடி நிதி கிடைக்கும் பட்சத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கொக்குதொடுவாய்  மனித புதைகுழியின்  அகழ்வு பணி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement