• May 02 2024

ராஜபக்ச குடும்பத்தின் அடுத்தகட்ட சதித்திட்டம் - சிக்குவாரா ரணில்..!

Chithra / Feb 22nd 2024, 1:54 pm
image

Advertisement

 

கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும், பிரத்தியேக செயலாளராக தொடர்ந்த சுகீஸ்வர பண்டார அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சுகீஸ்வர பண்டார செயற்படுவதாக பல மாதங்களாக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அதற்கமைய, நேற்று முன்தினம் கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இந்த நிலையில் நிமல் லான்சா உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து பணியாற்ற அவர் தயாராகியுள்ளார்.

மேலும், ராஜபக்சர்களுக்கு எதிராக கடும் வார்த்தை தாக்குதல் நடத்துவார் எனவும் தெரியவந்துள்ளது.

இவை அனைத்தும் ராஜபக்ச குடும்பத்தின் பூரண சம்மதத்துடன் திட்டமிட்டு தயார் செய்யும் நடவடிக்கை என அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகிப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜபக்சர்களுக்கு எதிராக செயற்படுவது போன்று காட்டிக் கொண்டு ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதிலும் குடும்பத்தை பாதுகாப்பதிலும் சுகீஸ்வர பண்டாரவுக்கு வலுவான பங்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வாளர்கள் மேலும் கணித்துள்ளனர்.

ராஜபக்ச குடும்பத்தின் அடுத்தகட்ட சதித்திட்டம் - சிக்குவாரா ரணில்.  கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும், பிரத்தியேக செயலாளராக தொடர்ந்த சுகீஸ்வர பண்டார அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சுகீஸ்வர பண்டார செயற்படுவதாக பல மாதங்களாக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.அதற்கமைய, நேற்று முன்தினம் கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் நிமல் லான்சா உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து பணியாற்ற அவர் தயாராகியுள்ளார்.மேலும், ராஜபக்சர்களுக்கு எதிராக கடும் வார்த்தை தாக்குதல் நடத்துவார் எனவும் தெரியவந்துள்ளது.இவை அனைத்தும் ராஜபக்ச குடும்பத்தின் பூரண சம்மதத்துடன் திட்டமிட்டு தயார் செய்யும் நடவடிக்கை என அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகிப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ராஜபக்சர்களுக்கு எதிராக செயற்படுவது போன்று காட்டிக் கொண்டு ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதிலும் குடும்பத்தை பாதுகாப்பதிலும் சுகீஸ்வர பண்டாரவுக்கு வலுவான பங்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வாளர்கள் மேலும் கணித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement