• Feb 06 2025

மகிந்தவின் பாதுகாப்பு குறைப்பு விவகாரம்: விசாரணைக்கு வருகிறது அடிப்படை உரிமை மனு

Chithra / Feb 6th 2025, 12:04 pm
image


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  பாதுகாப்பு குறைப்பு தொடர்பில் அவரின் வழக்கறிஞர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு இன்று  நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மனு விசாரணையை எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி அன்று எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மகிந்தவின் பாதுகாப்பு குறைப்பு விவகாரம்: விசாரணைக்கு வருகிறது அடிப்படை உரிமை மனு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  பாதுகாப்பு குறைப்பு தொடர்பில் அவரின் வழக்கறிஞர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், இந்த மனு இன்று  நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, குறித்த மனு விசாரணையை எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி அன்று எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement