• May 17 2024

வெள்ளத்தில் காட்சியளித்த விநாயகர்...!வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்...! samugammedia

Sharmi / Oct 12th 2023, 2:13 pm
image

Advertisement

நேற்று மாலை பெய்த மழையில் சாமிமலை பகுதியில் உள்ள ஆலயம் விநாயகர் ஆலயம் நீரில் மூழ்கியது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஓல்டன் தோட்ட பத்தாம் நம்பர் பிரிவில் உள்ள விநாயகர் ஆலயம் மற்றும் குடியிருப்பு பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.

நேற்று மாலை சாமிமலை பகுதியில் பெய்த கன மழையால் மீட்டியா கோட்டை வன பகுதியில் உள்ள காட்டாறு வெள்ள பெருக்கு ஏற்பட்டது.அதன் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் சாமிமலை பத்தாம் நம்பர் பிரிவில் உள்ள விநாயகர் ஆலயம் மற்றும் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்தது.

இதன் காரணமாக அங்கு குடி இருந்த 24 குடும்பங்களைச் சேர்ந்த 150  வீட்டை விட்டு வெளியேறி உறவினர் இல்லங்களில் தற்காலிகமாக தங்கினர்.

இன்று காலை வேளையில் காட்டாறில் வெள்ளம் குறைந்தால் மீண்டும் அனைவரும் தங்களது குடியிருப்புகளுக்கு வந்துள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

ஆலயத்தின் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.



வெள்ளத்தில் காட்சியளித்த விநாயகர்.வீட்டை விட்டு வெளியேறிய மக்கள். samugammedia நேற்று மாலை பெய்த மழையில் சாமிமலை பகுதியில் உள்ள ஆலயம் விநாயகர் ஆலயம் நீரில் மூழ்கியது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஓல்டன் தோட்ட பத்தாம் நம்பர் பிரிவில் உள்ள விநாயகர் ஆலயம் மற்றும் குடியிருப்பு பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.நேற்று மாலை சாமிமலை பகுதியில் பெய்த கன மழையால் மீட்டியா கோட்டை வன பகுதியில் உள்ள காட்டாறு வெள்ள பெருக்கு ஏற்பட்டது.அதன் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் சாமிமலை பத்தாம் நம்பர் பிரிவில் உள்ள விநாயகர் ஆலயம் மற்றும் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்தது.இதன் காரணமாக அங்கு குடி இருந்த 24 குடும்பங்களைச் சேர்ந்த 150  வீட்டை விட்டு வெளியேறி உறவினர் இல்லங்களில் தற்காலிகமாக தங்கினர்.இன்று காலை வேளையில் காட்டாறில் வெள்ளம் குறைந்தால் மீண்டும் அனைவரும் தங்களது குடியிருப்புகளுக்கு வந்துள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.ஆலயத்தின் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement