• Jan 09 2025

கிண்ணியா-கொழும்பு பிரதான வீதியில் குப்பை கூளங்கள்; மக்கள் கோரிக்கை..!

Sharmi / Jan 2nd 2025, 8:58 am
image

கிண்ணியா பிரதேச சபை பிரிவுகுட்பட்ட, கொழும்பு பிரதான வீதியில், சிவப்பு பாலத்துக்கு அண்மித்த வீதி ஓரங்களில் குப்பை கூளங்கள் நிறைந்து காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன்கள், பழுதடைந்த உணவுப் பொருட்கள், வீட்டுக் கழிவுகள், உணவகங்களில் உள்ள மாமிச கழிவுகள் மற்றும் வைத்தியசாலை கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் இந்த தெரு ஓரங்களில் குவிந்து காணப்படுகின்றன.

இந்தப் பகுதியில், இனந்தெரியாதோரால், இரவு நேரங்களில், இவ்வாறான கழிவுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டு வருவதால் சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அப்போது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

குறித்த வீதியில் சுமார் நூறு மீட்டர் தூரம் வரை மூன்று இடங்களில் இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்த கழிவுகளை நாடி, யானைகளும் முதலைகளும் இந்தப் பகுதியில், நடமாடி வருவதாகவும், இதன் காரணமாக அந்தப் பகுதியால் பிரயாணம் செய்வது ஆபத்தானதாக மாறி இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, கிண்ணியா பிரதேச சபை இந்த விடயத்தில், உரிய கவனம் செலுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


கிண்ணியா-கொழும்பு பிரதான வீதியில் குப்பை கூளங்கள்; மக்கள் கோரிக்கை. கிண்ணியா பிரதேச சபை பிரிவுகுட்பட்ட, கொழும்பு பிரதான வீதியில், சிவப்பு பாலத்துக்கு அண்மித்த வீதி ஓரங்களில் குப்பை கூளங்கள் நிறைந்து காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன்கள், பழுதடைந்த உணவுப் பொருட்கள், வீட்டுக் கழிவுகள், உணவகங்களில் உள்ள மாமிச கழிவுகள் மற்றும் வைத்தியசாலை கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் இந்த தெரு ஓரங்களில் குவிந்து காணப்படுகின்றன.இந்தப் பகுதியில், இனந்தெரியாதோரால், இரவு நேரங்களில், இவ்வாறான கழிவுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டு வருவதால் சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அப்போது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த வீதியில் சுமார் நூறு மீட்டர் தூரம் வரை மூன்று இடங்களில் இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.இந்த கழிவுகளை நாடி, யானைகளும் முதலைகளும் இந்தப் பகுதியில், நடமாடி வருவதாகவும், இதன் காரணமாக அந்தப் பகுதியால் பிரயாணம் செய்வது ஆபத்தானதாக மாறி இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.எனவே, கிண்ணியா பிரதேச சபை இந்த விடயத்தில், உரிய கவனம் செலுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement