• Nov 22 2024

காஸா-ஒரே நாளில் 81 பேர் பலி: அனைத்து போர் விதிகளையும் மீறிய இஸ்ரேல்!

Shanthini / Jul 18th 2024, 7:47 am
image

“காசாவில் அனைத்துப் போர் விதிகளும் மீறப்பட்டுள்ளன" என்று UNRWA தலைவர் பிலிப் லஸ்ஸரினி   (Philippe Lazzarini) தெரிவித்துள்ளார்.

Israeli attacks kill 81 in a day as released Gaza detainees recount torture

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் உள்ள வீடுகள் மற்றும் ஐ.நா. வளாகங்களை குறிவைத்து   இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 81 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


காஸாவில் பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு(UNRWA) நடத்தும் பள்ளிகள் இஸ்ரேலிய குண்டுவீச்சிலிருந்து தப்பிச் செல்லும் பொதுமக்களுக்கு புகலிடமாக உள்ளன.

Israel-Hamas war updates: Israel says its forces surround Gaza City


ஆனால் UNRWA-ஆல் நடத்தப்படும் இந்தப் பள்ளிகள் மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றது


அத்துடன் உலக சுகாதார அமைப்பு (WHO) அக்டோபர் 7 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்தில் உள்ள சுகாதார நிலையங்கள்  மீது 1,000 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஆவணப்படுத்தியுள்ளது.


இந்த நிலையில்  ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலானது பாலஸ்தீனியர்களுடனான இரு நாட்டுத் தீர்விற்கான அனைத்து வாய்ப்புக்களையும்  அழிக்கும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.


அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் குறைந்தது 38,794 பேர் கொல்லப்பட்டு 89,364 பேர் காயமடைந்துள்ளனர். அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். அத்தோடு ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஸா-ஒரே நாளில் 81 பேர் பலி: அனைத்து போர் விதிகளையும் மீறிய இஸ்ரேல் “காசாவில் அனைத்துப் போர் விதிகளும் மீறப்பட்டுள்ளன" என்று UNRWA தலைவர் பிலிப் லஸ்ஸரினி   (Philippe Lazzarini) தெரிவித்துள்ளார்.கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் உள்ள வீடுகள் மற்றும் ஐ.நா. வளாகங்களை குறிவைத்து   இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 81 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.காஸாவில் பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு(UNRWA) நடத்தும் பள்ளிகள் இஸ்ரேலிய குண்டுவீச்சிலிருந்து தப்பிச் செல்லும் பொதுமக்களுக்கு புகலிடமாக உள்ளன.ஆனால் UNRWA-ஆல் நடத்தப்படும் இந்தப் பள்ளிகள் மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றதுஅத்துடன் உலக சுகாதார அமைப்பு (WHO) அக்டோபர் 7 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்தில் உள்ள சுகாதார நிலையங்கள்  மீது 1,000 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஆவணப்படுத்தியுள்ளது.இந்த நிலையில்  ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலானது பாலஸ்தீனியர்களுடனான இரு நாட்டுத் தீர்விற்கான அனைத்து வாய்ப்புக்களையும்  அழிக்கும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் குறைந்தது 38,794 பேர் கொல்லப்பட்டு 89,364 பேர் காயமடைந்துள்ளனர். அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். அத்தோடு ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement