• May 02 2024

காஸா போர் எதிரொலி - பாலஸ்தீன பிரதமர் ராஜிநாமா..!samugammedia

mathuri / Feb 27th 2024, 6:16 am
image

Advertisement

பாலஸ்தீன பிரதமர் முஹம்மது ஷ்டய்யே நேற்று (26) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பாலஸ்தீனர்கள் வசிக்கும் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம், தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில், பாலஸ்தீன நிர்வாகத்தில் புதிய திருப்பமாக, பாலஸ்தீன பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக முஹம்மது ஷ்டய்யே அறிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் முஹம்மது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அவர் நேற்று சமர்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள்ளது. 

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், காஸாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பாலஸ்தீனத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்ரேலின் காசா யுத்தத்தின் பின்னரான அரசியல் ஏற்பாடுகள் குறித்து கருத்துடன்பாடு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக தான் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

காஸா போர் எதிரொலி - பாலஸ்தீன பிரதமர் ராஜிநாமா.samugammedia பாலஸ்தீன பிரதமர் முஹம்மது ஷ்டய்யே நேற்று (26) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பாலஸ்தீனர்கள் வசிக்கும் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம், தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில், பாலஸ்தீன நிர்வாகத்தில் புதிய திருப்பமாக, பாலஸ்தீன பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக முஹம்மது ஷ்டய்யே அறிவித்துள்ளார்.பாலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் முஹம்மது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அவர் நேற்று சமர்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள்ளது. காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், காஸாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பாலஸ்தீனத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் இஸ்ரேலின் காசா யுத்தத்தின் பின்னரான அரசியல் ஏற்பாடுகள் குறித்து கருத்துடன்பாடு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக தான் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement