எரிபொருளுக்கான தற்போதைய வரிகளை மீளாய்வு செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, 2024 ஜனவரி முதலாம் திகதி முதல், ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 72 ரூபாவும், ஒரு லீட்டர் ஓட்டோ டீசலுக்கு 50 ரூபாவும், சூப்பர் டீசலுக்கு 57 ரூபாவும் வரியாக அறவிடப்படுகின்றது.
ஜனாதிபதியினால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் உரிய வரிகள் அதே முறையில் தொடர்ந்தும் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் வரி தொடர்பில் ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி அறிவிப்பு. எரிபொருளுக்கான தற்போதைய வரிகளை மீளாய்வு செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன்படி, 2024 ஜனவரி முதலாம் திகதி முதல், ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 72 ரூபாவும், ஒரு லீட்டர் ஓட்டோ டீசலுக்கு 50 ரூபாவும், சூப்பர் டீசலுக்கு 57 ரூபாவும் வரியாக அறவிடப்படுகின்றது.ஜனாதிபதியினால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் உரிய வரிகள் அதே முறையில் தொடர்ந்தும் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.