• Nov 24 2024

பொதுத் தேர்தல்; நிராகரிக்கப்பட்ட அஞ்சல் மூல விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு

Chithra / Oct 21st 2024, 2:18 pm
image

 

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 759,210 அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதற்கமைய, இதுவரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அஞ்சல் மூல விண்ணப்பங்களின் படி, 738,659 பேர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளன. 

அதன்படி, பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், காவல் நிலையங்களில் இந்த மாதம் 30ஆம் திகதியும் அடுத்த மாதம் 4ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. 

அத்துடன் ஏனைய அரச நிறுவனங்களிலும் இராணுவ முகாம்களிலும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக அடுத்த மாதம் 7ஆம் 8ஆம் திகதி வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.


பொதுத் தேர்தல்; நிராகரிக்கப்பட்ட அஞ்சல் மூல விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு  எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 759,210 அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.அதில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, இதுவரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அஞ்சல் மூல விண்ணப்பங்களின் படி, 738,659 பேர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளன. அதன்படி, பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், காவல் நிலையங்களில் இந்த மாதம் 30ஆம் திகதியும் அடுத்த மாதம் 4ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. அத்துடன் ஏனைய அரச நிறுவனங்களிலும் இராணுவ முகாம்களிலும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக அடுத்த மாதம் 7ஆம் 8ஆம் திகதி வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement