இன்றைய தினம் வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் இம்முறையும் அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 5 வருடங்களாக ஷேக் ஹசீனா வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இதே வேளை, இந்தத் தோ்தலைப் புறக்கணித்துள்ள முக்கிய எதிா்க்கட்சியான வங்காளதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி), தோ்தலை நிறுத்த வலியுறுத்தி சனிக்கிழமை (6) முதல் திங்கட்கிழமை (8) வரை 48 மணி நேர பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த தேர்தல் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளையும் சோ்ந்த 125 அதிகாரிகளின் மேற்பாா்வையில் தோ்தல் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் 42,000 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தோ்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான எதிா்க்கட்சியினா் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் - எதிர்க்கட்சியினர் வேலை நிறுத்தம்.samugammedia இன்றைய தினம் வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் இம்முறையும் அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 5 வருடங்களாக ஷேக் ஹசீனா வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த இதே வேளை, இந்தத் தோ்தலைப் புறக்கணித்துள்ள முக்கிய எதிா்க்கட்சியான வங்காளதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி), தோ்தலை நிறுத்த வலியுறுத்தி சனிக்கிழமை (6) முதல் திங்கட்கிழமை (8) வரை 48 மணி நேர பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்த தேர்தல் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளையும் சோ்ந்த 125 அதிகாரிகளின் மேற்பாா்வையில் தோ்தல் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நாடு முழுவதும் 42,000 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தோ்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான எதிா்க்கட்சியினா் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.