• Apr 27 2025

அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் வரலாற்று சாதனை!

Chithra / Apr 27th 2025, 11:09 am
image


தற்போது வெளியாகியுள்ள பரீட்சையின் பிரகாரம் உயிரியல் விஞ்ஞான பிரிவில், கிண்ணியா முஸ்லிம் அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

எம். என். மின்ஹா மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், எம். ஏ. எப். இனாசிரின் மாவட்ட மட்டத்தில் ஆறாம் இடத்தையும் பெற்று இந்த சாதனையை நிலைநாட்டி மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பாடசாலைக்கு உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவுக்கான அனுமதி கிடைத்து முதல் தடவையிலே, இந்த மாணவிகள் இந்த சாதனை நிலைநாட்டி உள்ளனர்.

விஞ்ஞான பிரிவில், முதல் தடவையாக 13 மாணவிகள் இந்தப் பாடசாலையில் இருந்து தோன்றியிருந்தனர். இதில் பத்து மாணவிகள் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடசாலைக்கு விஞ்ஞான பிரிவுக்கான அனுமதி கிடைத்து முதல் தடவையிலே, இந்த மாணவிகள் குறித்த சாதனையை நிலைநாட்டி இருப்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும். 

அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் வரலாற்று சாதனை தற்போது வெளியாகியுள்ள பரீட்சையின் பிரகாரம் உயிரியல் விஞ்ஞான பிரிவில், கிண்ணியா முஸ்லிம் அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.எம். என். மின்ஹா மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், எம். ஏ. எப். இனாசிரின் மாவட்ட மட்டத்தில் ஆறாம் இடத்தையும் பெற்று இந்த சாதனையை நிலைநாட்டி மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இந்த பாடசாலைக்கு உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவுக்கான அனுமதி கிடைத்து முதல் தடவையிலே, இந்த மாணவிகள் இந்த சாதனை நிலைநாட்டி உள்ளனர்.விஞ்ஞான பிரிவில், முதல் தடவையாக 13 மாணவிகள் இந்தப் பாடசாலையில் இருந்து தோன்றியிருந்தனர். இதில் பத்து மாணவிகள் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்தப் பாடசாலைக்கு விஞ்ஞான பிரிவுக்கான அனுமதி கிடைத்து முதல் தடவையிலே, இந்த மாணவிகள் குறித்த சாதனையை நிலைநாட்டி இருப்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும். 

Advertisement

Advertisement

Advertisement