• Nov 28 2024

சுதந்திரமே இல்லாத நாட்டில் சுக போகத்துக்கு செலவழிக்கும் பணத்தை விவசாயிகளுக்கு வழங்குங்கள்...! சாணக்கியன் எம்.பி கோரிக்கை...!

Sharmi / Mar 23rd 2024, 11:42 am
image

சுதந்திரமே இல்லாத நாட்டில் சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் சுக போகத்துக்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திற்கு செலவு செய்தால் விவசாயிகளினதும் நாட்டு மக்களினதும் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்வடையும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் நேற்றையதினம்(22)  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில்,

அந்த வகையில் வடக்கு கிழக்கில் வாழும் எமது மக்கள் விவசாயம், கால்நடை,மீன்பிடியினை நம்பி தமது வாழ்வாதாரத்தினை நடத்திச் செல்கின்றனர்.

ஆனால், அரசாங்கத்தினுடைய இனவாத செயற்பாட்டின் காரணமாக எங்களது மேய்ச்சல் தரையை வர்த்தமானி ஊடாக அறிவிக்காமல் பெரும்பான்மை இனத்தினை குடியேற்றி விவசாயம் மேற்கொள்ள முன்வந்தமையினால் இன்று கால்நடை வைத்திருக்கும் எமது தமிழ் மக்கள் கால்நடைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் விவசாயத்தை ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது வெருகல், திருகோணமலை, அம்பாறை ஆகிய இடங்களிலும் இப் பிரச்சனைகள் நிலவுகின்றன. ஆகவே இப் பிரச்சனைகளுக்கு விவசாய அமைச்சரும் சரியான தீர்மானத்தை பெற்றுத் தர வேண்டும்.

“2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்களை அமைப்போர் மகாவலி கங்கை  B வலயத்தினுள் உள்ளடக்கப்படமாட்டார்கள்” எனக் கூறியும் அத்துமீறிய குடியேற்றங்களை அமைத்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

இதற்கான தீர்வினை ஜனாதிபதி, விவசாய அமைச்சர், மாகவலிக்குரிய அமைச்சர் ஆகியோர் இணைந்து கலந்துரையாடி பெற்றுத் தர வேண்டும்.

மட்டக்களப்பில் வெல்லாவெளி,போரதீவுப்பற்றினை நோக்கினால் அங்குள்ள ஒரு சில நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இன்று வரை எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு  Insurance Co-operation நஷ்டஈடு வழங்கவில்லை. எனவும் அவர் தெரிவித்துள்ளார்

சுதந்திரமே இல்லாத நாட்டில் சுக போகத்துக்கு செலவழிக்கும் பணத்தை விவசாயிகளுக்கு வழங்குங்கள். சாணக்கியன் எம்.பி கோரிக்கை. சுதந்திரமே இல்லாத நாட்டில் சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் சுக போகத்துக்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திற்கு செலவு செய்தால் விவசாயிகளினதும் நாட்டு மக்களினதும் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்வடையும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்அவர் மேலும் நேற்றையதினம்(22)  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில்,அந்த வகையில் வடக்கு கிழக்கில் வாழும் எமது மக்கள் விவசாயம், கால்நடை,மீன்பிடியினை நம்பி தமது வாழ்வாதாரத்தினை நடத்திச் செல்கின்றனர்.ஆனால், அரசாங்கத்தினுடைய இனவாத செயற்பாட்டின் காரணமாக எங்களது மேய்ச்சல் தரையை வர்த்தமானி ஊடாக அறிவிக்காமல் பெரும்பான்மை இனத்தினை குடியேற்றி விவசாயம் மேற்கொள்ள முன்வந்தமையினால் இன்று கால்நடை வைத்திருக்கும் எமது தமிழ் மக்கள் கால்நடைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் விவசாயத்தை ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது வெருகல், திருகோணமலை, அம்பாறை ஆகிய இடங்களிலும் இப் பிரச்சனைகள் நிலவுகின்றன. ஆகவே இப் பிரச்சனைகளுக்கு விவசாய அமைச்சரும் சரியான தீர்மானத்தை பெற்றுத் தர வேண்டும்.“2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்களை அமைப்போர் மகாவலி கங்கை  B வலயத்தினுள் உள்ளடக்கப்படமாட்டார்கள்” எனக் கூறியும் அத்துமீறிய குடியேற்றங்களை அமைத்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.இதற்கான தீர்வினை ஜனாதிபதி, விவசாய அமைச்சர், மாகவலிக்குரிய அமைச்சர் ஆகியோர் இணைந்து கலந்துரையாடி பெற்றுத் தர வேண்டும்.மட்டக்களப்பில் வெல்லாவெளி,போரதீவுப்பற்றினை நோக்கினால் அங்குள்ள ஒரு சில நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.ஆனால் இன்று வரை எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு  Insurance Co-operation நஷ்டஈடு வழங்கவில்லை. எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement