• Sep 17 2026

நீதிமன்றத்தில் சரணடைந்தார் ஞானசார தேரர் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Chithra / Sep 16th 2026, 11:56 am
image

 

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலாகொட அத்தே ஞானசார தேரர் இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது, வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர் நீதிமன்றம் செல்லாது என அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் அவர் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.


நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையில் சுமார் ஒன்பது மாதங்களை அனுபவித்திருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பின் மூலம் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் சரணடைந்தார் ஞானசார தேரர் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு  இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலாகொட அத்தே ஞானசார தேரர் இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர் நீதிமன்றம் செல்லாது என அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் அவர் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையில் சுமார் ஒன்பது மாதங்களை அனுபவித்திருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பின் மூலம் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement