• Nov 27 2024

சிறையிலிருந்து வெளியேறினார் ஞானசார தேரர் - வெளிநாடு செல்லத் தடை

Chithra / Jul 22nd 2024, 12:24 pm
image

 

நான்கு வருட கால கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதிக்கப்பட்டிருந்த பொது­பலசேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ர் பிணையில் விடுதலைசெய்யப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை சிறையிலிருந்து வெளியேறியுள்ளார்.

18 ஆம் திகதி பிணையில் விடுவிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய கல­கொட அத்தே ஞான­சார தேர­ரை விடுதலை செய்ய  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று (22) காலை  உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கூர­கல தொல்­லியல் அமை­விடம் தொடர்­பாக 2016 இல் கொழும்பில் நடத்­தப்­பட்ட ஊடக மாநா­டொன்றில் இஸ்லாமிய மதத்தை இழி­வு­ப­டுத்தும் விதத்தில் கருத்­துக்­களை தெரி­வித்­த­மைக்­காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கால கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதிக்கப்பட்டது. அத்­துடன் அவ­ருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது.

இந்நிலையில், 50,000 ரூபாய் காசு பிணையிலும் தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன் வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்து மேன் முறையீட்டு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

சிறையிலிருந்து வெளியேறினார் ஞானசார தேரர் - வெளிநாடு செல்லத் தடை  நான்கு வருட கால கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதிக்கப்பட்டிருந்த பொது­பலசேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ர் பிணையில் விடுதலைசெய்யப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை சிறையிலிருந்து வெளியேறியுள்ளார்.18 ஆம் திகதி பிணையில் விடுவிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய கல­கொட அத்தே ஞான­சார தேர­ரை விடுதலை செய்ய  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று (22) காலை  உத்தரவை பிறப்பித்துள்ளார்.கூர­கல தொல்­லியல் அமை­விடம் தொடர்­பாக 2016 இல் கொழும்பில் நடத்­தப்­பட்ட ஊடக மாநா­டொன்றில் இஸ்லாமிய மதத்தை இழி­வு­ப­டுத்தும் விதத்தில் கருத்­துக்­களை தெரி­வித்­த­மைக்­காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கால கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதிக்கப்பட்டது. அத்­துடன் அவ­ருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது.இந்நிலையில், 50,000 ரூபாய் காசு பிணையிலும் தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன் வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்து மேன் முறையீட்டு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement