• Dec 14 2024

திருமலையில் திடீரென இடிந்து விழுந்த பல்நோக்கு கட்டிடம்..!

Sharmi / Nov 27th 2024, 11:11 am
image

திருகோணமலை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, வெள்ளைமணல் கிராம சேவகர் பிரிவில், சின்னம்பிள்ளைச்சேனை கிராமத்தில் அமைந்துள்ள, பல்தேவைக் கட்டிடம் கன மழையினால், நேற்று இரவு(26) இடிந்து, விழுந்து சேதமடைந்துள்ளது.

இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி, முழுமையாக சேதமடைந்துள்ளது. 

ஏனைய பகுதியும் எந்த நேரமும் விடிந்து விடக்கூடிய, ஆபத்தான நிலையில் இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கட்டடத்தின் மீதி பகுதியும் ஆபத்தான நிலையில் இருப்பதால், எவரும் இந்தக் கட்டடத்துக்குள், உட்பிரவேசிக்க வேண்டாம் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச சுகாதாரப் பராமரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் கிராம சேவகர் அலுவலகம், பிரதேச மாதர் அபிவிருத்தி நிலையம், குடிசை கைத்தொழில் பயிற்சி நிலையம், பிரதேச மீனவர் சங்க அலுவலகம் ஆகியன இயங்கி வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


திருமலையில் திடீரென இடிந்து விழுந்த பல்நோக்கு கட்டிடம். திருகோணமலை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, வெள்ளைமணல் கிராம சேவகர் பிரிவில், சின்னம்பிள்ளைச்சேனை கிராமத்தில் அமைந்துள்ள, பல்தேவைக் கட்டிடம் கன மழையினால், நேற்று இரவு(26) இடிந்து, விழுந்து சேதமடைந்துள்ளது.இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி, முழுமையாக சேதமடைந்துள்ளது. ஏனைய பகுதியும் எந்த நேரமும் விடிந்து விடக்கூடிய, ஆபத்தான நிலையில் இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.கட்டடத்தின் மீதி பகுதியும் ஆபத்தான நிலையில் இருப்பதால், எவரும் இந்தக் கட்டடத்துக்குள், உட்பிரவேசிக்க வேண்டாம் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.பிரதேச சுகாதாரப் பராமரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டிடத்தில் கிராம சேவகர் அலுவலகம், பிரதேச மாதர் அபிவிருத்தி நிலையம், குடிசை கைத்தொழில் பயிற்சி நிலையம், பிரதேச மீனவர் சங்க அலுவலகம் ஆகியன இயங்கி வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement