• Nov 24 2024

மாலியில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து- 70 பேர் உயிரிழப்பு..!! samugammedia

Tamil nila / Jan 25th 2024, 9:57 pm
image

மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. 

இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளரான மாலியில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஏனெனில் இது போன்ற சுரங்க பணிகளில் ஈடுபடும் சிறிய தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கிடையாது என்று கூறப்படுகிறது.

மாலியில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து- 70 பேர் உயிரிழப்பு. samugammedia மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.மேலும் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளரான மாலியில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஏனெனில் இது போன்ற சுரங்க பணிகளில் ஈடுபடும் சிறிய தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கிடையாது என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement