• May 20 2024

கோல்டன் குளோப் விருது விருதை பெற்ற ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Chithra / Jan 11th 2023, 11:00 am
image

Advertisement

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இடம் பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது.

மகதீரா, நான் ஈ, பாகுபாலி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. 

இப்படத்தின் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருந்தது.


திரைப்படங்களுக்கான உயரிய கௌரவமாக கருதப்படும் ஆஸ்காருக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருதுகள் விளங்கி வருகின்றன. 

ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியன் சார்பில் வழங்கப்படும் இந்த விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில், மோஷன் பிக்சர் பிரிவில் சிறந்த பாடலாக நாட்டு நாட்டு பாடல் தேர்வாகியுள்ளதாக கோல்டன் குளோப் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்கான விருதை படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றுக்கொண்டார். கோல்டன் குளோப் விருது விழாவில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குநர் ராஜமவுலி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஏராளமான திரைக்கலைஞர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கோல்டன் குளோப் விருது விருதை பெற்ற ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இடம் பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது.மகதீரா, நான் ஈ, பாகுபாலி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படத்தின் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருந்தது.திரைப்படங்களுக்கான உயரிய கௌரவமாக கருதப்படும் ஆஸ்காருக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருதுகள் விளங்கி வருகின்றன. ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியன் சார்பில் வழங்கப்படும் இந்த விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில், மோஷன் பிக்சர் பிரிவில் சிறந்த பாடலாக நாட்டு நாட்டு பாடல் தேர்வாகியுள்ளதாக கோல்டன் குளோப் தரப்பில் அறிவிக்கப்பட்டது.இதற்கான விருதை படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றுக்கொண்டார். கோல்டன் குளோப் விருது விழாவில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குநர் ராஜமவுலி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஏராளமான திரைக்கலைஞர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement